பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படத்தில் சீதையாக நடிக்கும் ஊர்வசி ரட்டேலா!?

பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படத்தில் சீதையாக நடிக்கும் ஊர்வசி ரட்டேலா!?

பாலிவுட் நடிகை ஊர்வசி ரட்டேலா ஆதிபுருஷ் படத்தில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபாஸ் தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் ஓம் ரவுத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் ராமாயண கதையை அடிப்படையாயாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. இந்தப் படம் 3டி டெக்னாலஜியில் நேரடியாக தெலுங்கு மற்றும் ஹிந்தியில் எடுக்கப்படுகிறது. தமிழ், மலையாளம், கன்னடம் மற்ற இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது. T-Series நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது.

பிரபாஸின் 'ஆதிபுருஷ்' படத்தில் சீதையாக நடிக்கும் ஊர்வசி ரட்டேலா!?

ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் கடவுள் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். அதையடுத்து சீதை கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் கீர்த்தி சுரேஸை இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.

Exclusive: Urvashi Rautela on donning a traditional avatar in her upcoming film and knowing 23 dance

தற்போது ஆதிபுருஷ் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகை ஊர்வசி ரட்டேலா படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக பாலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஊர்வசி கடைசியாக பிளாக் ரோஸ் என்ற படத்தில் கடைசியாக நடித்துள்ளார். இவர் சமீபத்தில் கொரோனா வைரஸ் மீட்பு உதவிக்காக 5 கோடி நிதி அளித்தது அனைவராலும் பாராட்டப்பட்டது.

Share this story