ஒரு வழியா ‘வலிமை’ குறித்து வாய் திறந்த போனி கபூர்… அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி!

ஒரு வழியா ‘வலிமை’ குறித்து வாய் திறந்த போனி கபூர்… அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி!

தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வலிமை படம் குறித்து பேசியுள்ளார்.

எச் வினோத் இயக்கத்தில் அஜித் இரண்டாவது முறையாக ‘வலிமை’ படத்தில் நடிக்கிறார். வலிமை படத்தில் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். யுவன் வலிமை படத்திற்கு அறிமுகப் பாடலை முடிந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அறிமுகபாடலுக்காக ஒரிசாவில் இருந்து பல ட்ரம்ஸ் கலைஞர்களை வரவழைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரு வழியா ‘வலிமை’ குறித்து வாய் திறந்த போனி கபூர்… அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி!

அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ படத்தின் அறிவிப்பு வெளியானதிருந்து படம் குறித்து அப்டேட் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் முடிந்த பின்னரே படம் குறித்த அப்டேட் வெளியிடப்படும் என்று படக்குழு திட்டவட்டமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு வழியா ‘வலிமை’ குறித்து வாய் திறந்த போனி கபூர்… அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி!

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் வலிமை படம் குறித்து பேசியுள்ளார். அதில், வலிமை படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 15-ஆம் தேதி நிறைவடைவதாகவும், மீதமிருக்கும் சண்டைக் காட்சிகள் விரைவில் வெளிநாட்டில் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன, படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

Share this story