‘வலிமை’ பர்ஸ்ட் லுக் அப்டேட் கொடுத்த போனி கபூர்… உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்!

‘வலிமை’ பர்ஸ்ட் லுக் அப்டேட் கொடுத்த போனி கபூர்… உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்!

வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் படம் குறித்து அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘நேர்கொண்ட பார்வை’ வெற்றியை அடுத்து எச் வினோத்- அஜித் மற்றும் போனி கபூர் கூட்டணி இரண்டாவது முறையாக ‘வலிமை’ படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தில் நடிகை ஹுமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

‘வலிமை’ பர்ஸ்ட் லுக் அப்டேட் கொடுத்த போனி கபூர்… உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்!

வலிமை படம் குறித்த அறிவிப்பு வந்ததிலிருந்தே அஜித் ரசிகர்கள் படம் குறித்த அப்டேட் கேட்டு ரகளை செய்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் வலிமை அப்டேட் கேட்டு போஸ்டர் அடித்தனர். முதல்வர் பிரச்சாரத்தில் போய் வலிமை அப்டேட் கேட்டனர். நேற்று பிரதமர் சென்னை வந்த போது அங்கும் சென்று வலிமை அப்டேட் கேட்டுள்ளனர்.

இப்படி ரசிகர்களின் அளவில்லா அன்பைப் பார்த்த போனி கபூர் இறுதியாக படம் குறித்த அப்டேட்டை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

‘வலிமை’ பர்ஸ்ட் லுக் அப்டேட் கொடுத்த போனி கபூர்… உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்!

“வணக்கம். எங்கள் ‘வலிமை’ திரைப்படத்தின் மீதான உங்கள் அன்பால் மகிழ்ச்சியடைகிறேன். பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை விரைவில் வெளியிடுவதற்காக நாங்கள் பணியாற்றி வருவதால் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இது படத்தின் மீது நலத்திற்காக மட்டுமே!” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கு முன்னர் அளித்த பேட்டியில், வலிமை படப்பிடிப்பு இந்த மாதம் 15-ஆம் தேதி நிறைவடைவதாகவும், மீதமிருக்கும் சண்டைக் காட்சிகள் விரைவில் வெளிநாட்டில் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Share this story