ஒரு வழியாக ‘வலிமை’ படத்தைக் குறிப்பிட்ட போனி கபூர்… இந்திய அளவில் ட்ரெண்ட் செய்த அஜித் ரசிகர்கள்!

ஒரு வழியாக ‘வலிமை’ படத்தைக் குறிப்பிட்ட போனி கபூர்… இந்திய அளவில் ட்ரெண்ட் செய்த அஜித் ரசிகர்கள்!

தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தைக் குறிப்பிட்டு யுவன் ஷங்கர் ராஜாவைப் பாராட்டியுள்ளது சமூக வலைதங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

தற்போது அஜித், ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைப் போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பொதுவாக அஜித் படங்கள் என்றாலே அவ்வளவாக அப்டேட் ஏதும் வெளியாகாது.

ஒரு வழியாக ‘வலிமை’ படத்தைக் குறிப்பிட்ட போனி கபூர்… இந்திய அளவில் ட்ரெண்ட் செய்த அஜித் ரசிகர்கள்!

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்கும் அப்படி தான் நடந்தது. அதே போல வலிமை படம் குறித்த எந்தவொரு அப்டேட்-ம் இதுவரை வெளியாகவில்லை. அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கொடுக்குமாறு படக்குழுவை வலியுறுத்தி வருகின்றனர்.

வலிமை அப்டேட்-ஐ காணவில்லை என்று போனி கபூரைக் குறிப்பிட்டு மதுரை அஜித் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியது சமூக வலைத்தளங்களில் வைரலாக மாறியது.

Image

இந்நிலையில் நேற்று மாரி 2 படத்தின் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் 1 பில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தது. அந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

தற்போது வலிமை படத்தின் தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவைப் பாராட்டி பதிவிட்டுள்ளார். “

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களின் இசை அமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவின் ரவுடி பேபி பாடல் இ பில்லியன் பார்வைகளைப் பெற்றதற்கு வாழ்த்துக்கள். இந்தச் சாதனை படைத்த முதல் தமிழ் பாடல் இதுவே” என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவில் #Valimai என்ற ஹாஷ்டாக் உபாயோகப்படுத்தப்பட்டிருப்பதால் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Share this story