கிளைமேக்ஸிற்கு முன்னேறும் மாநாடு… ட்விட்டரில் பட்டையைக் கிளப்பும் சிம்பு!

கிளைமேக்ஸிற்கு முன்னேறும் மாநாடு… ட்விட்டரில் பட்டையைக் கிளப்பும் சிம்பு!

மாநாடு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து சமூக வலைத்தளங்களில் மாநாடு படம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது. முழுக்க அரசியல் களத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். எஸ்ஜே சூர்யா, எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, பிரேம்ஜி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

கிளைமேக்ஸிற்கு முன்னேறும் மாநாடு… ட்விட்டரில் பட்டையைக் கிளப்பும் சிம்பு!

மாநாடு படத்திற்கு கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது மிகப்பெரிய அரசியல் மாநாடு போன்ற செட் வடிவமைக்கப்பட்டு கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

கிளைமேக்ஸிற்கு முன்னேறும் மாநாடு… ட்விட்டரில் பட்டையைக் கிளப்பும் சிம்பு!

தற்போது மாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் சிம்பு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் கலகலப்பாக பேசிக்கொண்டிருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து ட்விட்டரில் #Maanadu என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Share this story