‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் இந்த நடிகை தான்!?

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் இந்த நடிகை தான்!?

தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மலையாளத்தில் ஜோ பேபி இயக்கத்தில் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்‘ படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. பெண்கள் சுதந்திரம் என்று அனைவரும் பேசி வரும் நிலையில் தற்போதும் வீட்டிற்குள் பெண்கள் மீதான அடக்குமுறை வேறு வழிகளில் நடந்து வருகிறது என்ற நுணுக்கமான கதைக்களத்தை அடிப்படியாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு பல மொழி ரசிகர்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் இந்த நடிகை தான்!?

தற்போது இயக்குனர் கண்ணன் தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் உரிமைகளை வாங்கியுள்ளார். எனவே இந்தப் படத்தை ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கவுள்ளார்.

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் இந்த நடிகை தான்!?

தற்போது இந்தப் படத்தில் நிமிஷா சஜயன் கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படம் குறித்து ஏற்கனவே பேசியிருந்த இயக்குனர் கண்ணன் “இப்படம் இரண்டு மொழிகளில் உருவாக்கவிருப்பதால் இரு மொழியிலும் பிரபலமான ஒரு நடிகையை நடிக்க வைக்க விரும்புகிறேன்.” என்று தெரிவித்திருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ் ‘கனா’ படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன ‘கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி’ படத்தில் இடம் பெற்று தெலுங்கு ரசிகர்களிடத்தில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

Share this story