ஷங்கர் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன்!

ஷங்கர் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன்!

இயக்குனர் ஷங்கர் இயக்கும் படத்தில் நடிகை மாளவிகா மோகனன் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். அந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஷங்கர் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன்!

பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் அந்தப் படத்தில் கொரிய நடிகை சுஷீ பஃய் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதுதவிர அந்தப் படத்தில் யார் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பல நாட்களாக நிலவி வருகிறது.

ஷங்கர் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன்!

தற்போது நடிகை மாளவிகா மோகனன் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழில் முன்னணி நடிகையாக மாறி வரும் மாளவிகா இந்தப் படத்தின் மூலம் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக மாற வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் மாளவிகா மோகனன் தனுஷ் மற்றும் கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாகவிருக்கும் படத்திலும் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஷங்கர் மற்றும் ராம் சரண் கூட்டணியில் உருவாகவிருக்கும் இந்தப் படத்திற்கு இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் இந்தியன் 2 படத்தை முடிப்பதற்கு முன்னர் ஷங்கர் வேறு படங்களை இயக்கக் கூடாது என்று லைகா நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளதால் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம்!

Share this story