மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கும் பிரபுதேவா!?

மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கும் பிரபுதேவா!?

மாஸ்டர் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கை பிரபுதேவா இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கொரோனாவால் தியேட்டருக்கு வரத் தயங்கிய மக்களை வரவழைத்து மற்ற படங்களுக்கு கலங்கரை விளக்காய் அமைந்து, வெற்றி பெற்றது மாஸ்டர் திரைப்படம்.

மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கும் பிரபுதேவா!?

அதையடுத்து மாஸ்டர் திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தி ரீமேக்கில் நடிகர் சல்மான் கான் நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கும் பிரபுதேவா!?

தற்போதைய அப்டேட் என்னவென்றால், மாஸ்டர் இந்தி ரீமேக்கை பிரபுதேவா இயக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. பிரபு தேவா ஏற்கனவே சல்மான் கானை வைத்து வாண்டட், தபாங் 3, ராதே ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள அப்டேட் உண்மையானால், இந்தக் கூட்டணி இணையும் நான்காவது படமாக இது இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this story