மகேஷ் பாபுவுக்கு அத்தையாக நடிக்கும் ஷில்பா ஷெட்டி!?

மகேஷ் பாபுவுக்கு அத்தையாக நடிக்கும்  ஷில்பா ஷெட்டி!?

மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.

டோலிவுட் ஸ்டார் மகேஷ் பாபு தற்போது பரசுராம் இயக்கத்தில் ‘சர்க்கார் வாரி பாட்டா’ படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை அடுத்து இயக்குனர் த்ரிவிக்ரம் சீனிவாஸ் உடன் கூட்டணி அமைக்கிறார். இது மகேஷ் பாபு, த்ரிவிக்ரம் சீனிவாஸ் உடன் கூட்டணி அமைக்கும் மூன்றாவது படமாகும். ‘கலீஜா’ படத்திற்குப் பின்னர் 11 வருடங்கள் கழித்து இந்தக் கூட்டணி இணைந்துள்ளனர்.

மகேஷ் பாபுவுக்கு அத்தையாக நடிக்கும்  ஷில்பா ஷெட்டி!?

தற்போது இந்தப் படத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ஷில்பா ஷெட்டி மகேஷ் பாபுவின் அத்தையாக நடிக்க இருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகேஷ் பாபுவுக்கு அத்தையாக நடிக்கும்  ஷில்பா ஷெட்டி!?

இருப்பினும் தயாரிப்பளர்கள் ஷில்பா ஷெட்டி படத்தின் இணைவது குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஹரிகா & ஹாசின் கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். எஸ் தமன் இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

Share this story