இந்த போட்டோல விக்ரம் கூட இருக்குறது யாருன்னு தெரியுதா!?

இந்த போட்டோல விக்ரம் கூட இருக்குறது யாருன்னு தெரியுதா!?

நடிகர் விக்ரம் மீரா ஜாஸ்மின் உடன் இருக்கும் பழைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது இணையதளத்தில் விக்ரமின் பழைய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் விக்ரம் உடன் மீரா ஜாஸ்மின் இருக்கிறார். கூடவே ஒரு குழந்தை நட்சத்திரமும் இருக்கிறார். அது வேறு யாருமில்லை. நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் தான்.

இந்த போட்டோல விக்ரம் கூட இருக்குறது யாருன்னு தெரியுதா!?

அந்த புகைப்படம் 2005-ம் ஆண்டு நடைபெற்ற 51-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் எடுக்கப்பட்டுள்ளது. ‘பிதாமகன்’ படத்திற்காக விக்ரம் தேசிய விருது வாங்கியுள்ளார். ‘பாடம் ஒன்னு ஒரு விளபம்’ படத்திற்காக மீரா ஜாஸ்மின் தேசிய விருது வாங்கியுள்ளார். அதேபோல் ‘எண்ட வீடு அப்புவிண்டேயும்’ என்ற படத்திற்காக காளிதாஸ் ஜெயராம் தேசிய விருது பெற்றுள்ளார். அந்த நிகழ்வில் மூவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த போட்டோல விக்ரம் கூட இருக்குறது யாருன்னு தெரியுதா!?

அந்த புகைப்படத்தில் விக்ரம் ‘அந்நியன்’ படத்தின் காதல் யானை பாடலில் தோன்றிய கெட்டப்பில் காணப்படுகிறார். அநேகமாக அந்நியன் படப்பிடிப்பின் போது தான் விக்ரம் இந்த விழாவில் கலந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story