வம்பு பண்ணலாம்… இவ்வளவு அலும்பு பண்ணலாமா லிட்டில் சாரே.!?

வம்பு பண்ணலாம்… இவ்வளவு அலும்பு பண்ணலாமா லிட்டில் சாரே.!?

ஆன் டைம்க்கு ஷூட்டிங் வர்றார் என்பதையே ஆச்சர்யமாக பார்க்க வைத்த வாரிசு நடிகர் அவர். சமீபத்தில் வெளியான படத்தின் டீஸரில் தனக்கு போட்டியாளராக கருதும் இன்னொரு நடிகரை சம்பந்தம் இல்லாமல் போட்டுத் தாக்குவதாக நினைத்துக் கொண்டு வாரிசு நடிகர் பேசிய ‘பஞ்ச்’ டயலாக்கை இப்போதுவரை சோஷியல் மீடியாவில் ‘பஞ்ச்’சராக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதில், போட்டி நடிகரின் வளர்ச்சி என்ன… இவரோட வளர்ச்சி எங்க இருக்கு பத்து வருஷம் பின் தங்கி இருக்கிறவருக்கு எதுக்கு இப்படியொரு ‘பஞ்ச்’ டயலாக் என்று கேட்கிறார்கள். இதெல்லாம் அவர் காதுக்கு கேட்டிருக்குமா இல்லையான்னு தெரியல! நம்ம காதுக்கு வந்த செய்தி கூடுதல் அதிர்ச்சி ரகம்!

வம்பு பண்ணலாம்… இவ்வளவு அலும்பு பண்ணலாமா லிட்டில் சாரே.!?

புத்தாண்டு அதுவுமா ஷூட்டிங் போறோம் ஒரு கெத்தா இருக்குமேன்னு டொயோட்டாவின் லேட்டஸ்ட் வரவான ஒரு எஸ்யூவி காரை சில கோடிகள் கொடுத்து வாங்கியிருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்தக் காரை பார்த்த அத்தனைபேரும் ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்களாம். இப்படியொரு காரை இவர் வாங்கியிருக்கிறார் என்று யாரோ ஒருத்தர் வாரிசு நடிகருக்கு போட்டுக்கொடுத்திருக்கிறார்கள். அவ்வளவுதான், வாரிசு நடிகருக்கு ராத்திரி தூக்கம் போயிருச்சு!

வம்பு பண்ணலாம்… இவ்வளவு அலும்பு பண்ணலாமா லிட்டில் சாரே.!?

அம்மாகிட்ட அடம்பிடிச்சு… ராத்திரியோட ராத்திரியா அதே செக்மென்ட்டில் உள்ள வால்வோ காரை வாங்கிய பிறகுதான் நிம்மதியா தூங்கினாராம்.! முன்னவருக்கு எப்போதும் கருப்பு கலர் கார்தான் ஃபேவரைட் ;இவருக்கு வெள்ளைக் கலர் கார்!

நடிப்புல போட்டி போடுவாருன்னு பார்த்தால் வாரிசு நடிகர் எதில் போட்டி போடுறான்னு பாருங்க.!? என்னத்த சொல்ல.!?

Share this story