மலையாளத்தில் வெளியாகி ஹிட் ஆன படத்தின் தெலுங்கு ரீமேக்… ஹீரோயினைக் கண்டுபிடிக்க படக்குழு சிரமம்!

மலையாளத்தில் வெளியாகி ஹிட் ஆன படத்தின் தெலுங்கு ரீமேக்… ஹீரோயினைக் கண்டுபிடிக்க படக்குழு சிரமம்!

நெட்பிஃலிக்ஸில் வெளியாகிய மலையாளத் திரைப்படம் ‘கப்பேலா’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்க கடும் போட்டி நிலவி வருகிறது.
லாக்டவுனிற்கு முன்பு மார்ச் 6ஆம் தேதி திரையரங்கில் வெளியிடப்பட்ட கப்பேலா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில்ஊரடங்கிற்கு பின்பு தியேட்டர்கள் முடங்கியதால் நெட்பிஃலிக்ஸில் வெளியிடப்பட்டது.
Kappela Movie Review: A well-made story on women's travails
மலையாளத்தில் அன்னா பென், ஸ்ரீநாத் பாஸி மற்றும் ரோஷன் மேத்யூ ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். தற்போது இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. மலையாளத்தில் இந்தப் படத்தை இயக்கிய முகமது முஸ்தபா என்ற இயக்குனர்தான் தெலுங்கிலும் இயக்க உள்ளார். சித்தாரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது.
மலையாளத்தில் வெளியாகி ஹிட் ஆன படத்தின் தெலுங்கு ரீமேக்… ஹீரோயினைக் கண்டுபிடிக்க படக்குழு சிரமம்!
அன்னா பென் நடிப்பு இந்த படத்தில் பலரால் பாராட்டப்பட்டது. அவர் படத்தில் நடித்தது போன்று இல்லாமல் எதார்த்தமாக அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். எனவே அவரது கதாபாத்திரத்திற்காக நடிகையை தேர்வு செய்வது படக்குழுவிற்கு சற்று கடினமான வேலையாக தான் இருந்து வருகிறது. இந்த படத்தில் ஜெஸ்ஸியாக நடித்த அன்னா பென் கேரக்டருக்கு அனிகா சுரேந்திரன், கீர்த்தி ஷெட்டி, நித்யா ஷெட்டி என்ற மூன்று நடிகைகள் தற்போது பரிசீலனையில் இருக்கின்றார்கள்.
Kappela' excels as a small-town tale with a big heart | South ...
மேலும் ஸ்ரீநாத் பாசி வேடத்தில் விஷ்வக் சென் என்பவர் நடிக்கவுள்ளார். ரோஷன் மேத்யூ வேடத்தில் யார் நடிக்க இருக்கிறார் என்றும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்த படத்தின் படக்குழு பற்றிய மொத்த விவரங்களும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story