பிறந்தநாளன்று பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனையும் சூரி!

பிறந்தநாளன்று பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனையும் சூரி!

சினிமாவின் அனைத்துத் தடைகளையும் உடைத்தெறிந்து வெற்றி கண்ட பல நடிகர்களில் சூரியும் ஒருவர். சினிமாவில் சாதிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக விடாப்பிடியாக உழைத்து வந்த சூரி தற்போது சினிமாவின் முன்னணி நபர்களில் மாறியது அவரது கடின உழைப்பால் தான். முன்னணி காமெடி நடிகராக மாறிய போதும் எளிமையாக இருக்கிறார் சூரி.
Coronavirus Pandemic: Soori shares a video pleading people to stay at home | Tamil Movie News - Times of India
சூரி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதையடுத்து அவருக்கு திரையுலகப் பிரபலங்கள் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் “என் அன்பு @sooriofficial அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். 


தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் “என் இரத்த அனுக்களில் கலந்த இனிய நட்பு..,நல்ல குடும்பத்தலைவன்.., நல்ல மனிதன் மற்றும் என் பாசமிகு பங்காளி.. திரு.நடிகர். சூரி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்…,நட்பே துணை” என்று தெரிவித்துள்ளார்.


இயக்குனர் பாண்டிராஜ் “சேங்கை அரசி மவனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.


நடிகர் கவுதம் கார்த்திக் “நேர்மையான, மரியாதைக்குரிய, நேர்மையான, ஊக்கமளிக்கும், பணிவான மற்றும் மிகவும் நகைசுவையானவர்! “நீங்கள் என்ன ஒரு அற்புதமான மனிதர் என்பதை விவரிக்க சில வார்த்தைகள்! பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூரிணா!!
கடவுள் ஆசிர்வதிக்கட்டும்!” என்று தெரிவித்துள்ளார்.

Share this story