“இந்தி பட வாய்ப்பு வந்தா டி-சர்ட்டை கழட்டிருவாங்க”… ‘இந்தி தெரியாது போடா’ ட்ரெண்டிங் குறித்து நடிகை ஆர்த்தி கருத்து!

“இந்தி பட வாய்ப்பு வந்தா டி-சர்ட்டை கழட்டிருவாங்க”… ‘இந்தி தெரியாது போடா’ ட்ரெண்டிங் குறித்து நடிகை ஆர்த்தி கருத்து!

நடிகை ஆர்த்தி, இந்தி பட வாய்ப்பு வந்தால் பிரபலங்கள் வாய்ப்பு வந்தால் டி-சர்ட்டை கழட்டிவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

‘இந்தி தெரியாது போடா’ விவகாரம் தற்போது சோசியல் மீடியாக்களில் நெருப்பாய் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் டெல்லி விமான நிலையத்தில், இந்தி தெரியாது என்றதற்காக விமான நிலைய அதிகாரிகளால் அவமதிக்கப்பட்டதாக இயக்குனர் வெற்றிமாறன்  கூறியது தமிழகம் முழுதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

Image

அதையடுத்து, யுவன் சங்கர் ராஜா மற்றும் மெட்ரோ சிரிஷ் ஆகியோர் அணிந்திருந்த டி-சர்ட்டில் இடம்பெற்றிருந்த ‘I am a தமிழ் பேசும் Indian’ மற்றும் ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாக்கியங்கள் இந்திய அளவில் வைரலாகின. இவர்களைத் தொடர்ந்து நடிகர் சாந்தனுவும், அவரது மனைவியும் இதே வாசகங்கள் பொறிக்கப்பட்ட டீ-ஷர்ட்டை அணிந்து புகைப்படங்கள் வெளியிட்டனர். வெற்றிமாறனுக்கு கூட அதே டி-சர்ட்டுடன் புகைப்படன் வெளியிட்டார்.

“இந்தி பட வாய்ப்பு வந்தா டி-சர்ட்டை கழட்டிருவாங்க”… ‘இந்தி தெரியாது போடா’ ட்ரெண்டிங் குறித்து நடிகை ஆர்த்தி கருத்து!

தற்போது காமெடி நடிகை ஆர்த்தி இந்த ட்ரெண்டிங் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் “நம்ம தமிழ் -தாய் மாதிரி நமக்கு உயிர்மூச்சுSmiling face with heart-shaped eyes பிறருக்கு அவங்க மொழி அப்படிதான்… Folded hands
ஆதி மொழி தமிழிலிருந்து தான் எல்லா மொழியும்பிறந்திருக்கு..Hugging face அதனால பழிப்பது தவறு விரும்பினால் படிப்போம்… இந்தி பட வாய்ப்பு வந்தால் t. Shirtயை கழட்டிவிடுவார்கள் பிரபலங்கள் ஜாக்கிரதை” என்று தெரிவித்துள்ளார்.

Share this story