மொழி கடந்தும் மக்கள் மனதை வென்ற ‘செல்லம் சார்’… பேமிலி மேன் சீரிஸின் முக்கியக் கதாபாத்திரம்!

மொழி கடந்தும் மக்கள் மனதை வென்ற ‘செல்லம் சார்’… பேமிலி மேன் சீரிஸின் முக்கியக் கதாபாத்திரம்!

தி பேமிலி மேன் சீரிஸின் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்ற செல்லம் என்ற கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

மனோஜ் பாஜ்பாயி மற்றும் சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள தி பேமிலி மேன் சீரிஸின் இரண்டாம் பாகம் தமிழ் மக்களிடையே எதிர்ப்பைச் சந்தித்தாலும் நாடு முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

மொழி கடந்தும் மக்கள் மனதை வென்ற ‘செல்லம் சார்’… பேமிலி மேன் சீரிஸின் முக்கியக் கதாபாத்திரம்!

மனோஜ் பாஜ்பாயி மற்றும் சமந்தா என சீரிஸின் முன்னணிக் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுவது வழக்கம். ஆனால் ஒரு சிறு கதாபாத்திரமாக சீரிஸி வந்து போன செல்லம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உதய் மகேஷ் சீரிஸில் செல்லம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மொழி கடந்தும் மக்கள் மனதை வென்ற ‘செல்லம் சார்’… பேமிலி மேன் சீரிஸின் முக்கியக் கதாபாத்திரம்!

சொல்லப்போனால் செல்லம் சார் இல்லையென்றால் இந்தியாவின் நிலைமையே அவ்வளவு தான் என்று கூட சொல்லலாம். அந்தளவிற்கு செல்லம் முக்கியக் கதாபாத்திரம். கதையின் நாயகன் ஸ்ரீகாந்த் திவாரி ஈழப் போராளிகள் குறித்த தகவல் தேடும் போதெல்லாம் கோஸ்ட் மாதிரி திடீரெனத் தோன்றி தகவல் வழங்கும் மகான், செல்லம். மேலும் தனக்கே உரித்தான ஸ்டைல், கேரக்டர் என அந்தக் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம் மக்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. எனவே ட்விட்டரில் #ChellamSir என்ற தனி ஹாஷ்டாக்கே உருவாக்கி அவரைக் கொண்டாடிவிட்டனர். அனைவர்க்கும் ஒரு செல்லம் சார் வேண்டும் என்பதே தற்போதைய ஆசையாக மாறிவிட்டது.

எல்லாப் புகழும் செல்லம் சாருக்கே!

Share this story