1 மில்லியன் லைக்குகள், 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த செல்லம்மா பாடல்!

1 மில்லியன் லைக்குகள், 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த செல்லம்மா பாடல்!

டாக்டர் படத்தின் செல்லம்மா பாடல் 100 மில்லியன் பார்வைகள் மற்றும் 1 மில்லியன் லைக்குகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகை பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் வினய், கலையரசன் மற்றும் யோகி பாபு ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

1 மில்லியன் லைக்குகள், 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த செல்லம்மா பாடல்!

டாக்டர் படத்திலிருந்து வெளியாகியுள்ள அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. குறிப்பாக செல்லம்மா பாடல். அந்தப் பாடலுக்கு சிவகார்த்திகேயனே வரிகள் எழுதியுள்ளது கூடுதல் சிறப்பு. அந்தப் பாடல் வெளியாகி தற்போது வரை அந்தப் பாடலின் தாக்கம் குறையாமல் மூலை முடுக்கெங்கும் ஒலித்து வருகிறது.

தற்போது செல்லம்மா பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும் இந்தப் பாடல் 1 மில்லியனுக்கும் மேலான லைக்குகளையும் பெற்றுள்ளது. சிவகார்த்தியேன் கோலிவுட்டின் முன்னணி மாஸ் ஹீரோவாக மாறி வருகிறார் என்பதற்கு இதுவே சான்று.

Share this story