Thursday, May 13, 2021

Movie Stills

பவன் கல்யாணை மிரட்டிய பிரகாஷ் ராஜ்… பாராட்டிய சிரஞ்சீவி!

வக்கீல் சாப் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜின் சிறந்த நடிப்பை சிரஞ்சீவி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

பவன் கல்யாணை மிரட்டிய பிரகாஷ் ராஜ்... பாராட்டிய சிரஞ்சீவி!

இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதைடுத்து பிங்க் தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் ஆனது. தமிழிலும் இந்தக் கதைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது தெலுங்கில் பவன் கல்யாண், நிவேதா தாமஸ் நடிப்பில் வக்கீல் சாப் என்ற பெயரில் இந்தப் படம் ரீமேக் ஆகியுள்ளது. வக்கீல் சாப் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பவன் கல்யாணை மிரட்டிய பிரகாஷ் ராஜ்... பாராட்டிய சிரஞ்சீவி!

இந்த படத்தில் அஞ்சலி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீராம் வேணு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

தெலுங்கு ரசிகர்களிடையே இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், பிரகாஷ் ராஜ் வக்கீல் சாப் படத்தில் பவன் கல்யாணின் எதிர் தரப்பு வக்கீலாக சிறப்பாக நடித்திருந்தார்.

தற்போது பிரகாஷ் ராஜின் நடிப்பை டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி வெகுவாகப் பாராட்டியுள்ளார். “நீங்கள் பிரகாஷ் ராஜ் என்ற திறமை வாய்ந்த ஒரு நடிகரைக் கொண்டிருக்கும்போது, அந்தப் படத்தின் மற்ற நடிகர்களின் முக்கியத்துவமும் மேம்படுகிறது. வக்கீல் சாப் படத்தில் அவரது நடிப்பு முற்றிலும் ஆச்சரியமாக இருந்தது. மேலும் பவன் கல்யாணுக்கு ஒரு சிறந்த போட்டியாளராக நடித்துள்ளார். உங்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் பிரகாஷ்” என்று தெரிவித்துள்ளார்.

Latest Posts

உயிருக்கு போராடுவதாக வதந்தி.. டென்ஷனான பிரபல சீரியல் நடிகை தக்க பதிலடி!

உயிருக்கு போராடுவதாக வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து நடிகை கேப்ரியெல்லா தக்க பதிலடி கொடுத்துள்ளார். டிக்டாக் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியெல்லா. ரசிகர்களிடையே நல்ல...

“கொரோனா ரொம்ப டேஞ்சரஸ் ஃப்ளோ” – நடிகர் சென்றாயன் கதறல்

கொரானாவிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி நடிகர் சென்றாயன் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சென்றாயன். ‘மூடர் கூடம்’...
பவன் கல்யாணை மிரட்டிய பிரகாஷ் ராஜ்... பாராட்டிய சிரஞ்சீவி!பவன் கல்யாணை மிரட்டிய பிரகாஷ் ராஜ்... பாராட்டிய சிரஞ்சீவி!

Actress

-Advertisement-
TTN Cinema