ராதிகாவுக்கு பதில் நான் நடிக்கிறேனா ?… பிரபல நடிகை சொன்ன ‌பதில் !

ராதிகாவுக்கு பதில் நான் நடிக்கிறேனா ?… பிரபல நடிகை சொன்ன ‌பதில் !

சித்தி 2-ல் நடிக்கவிருக்கிறேன் என்பதில் துளியும் உண்மை இல்லை என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

ராதிகாவுக்கு பதில் நான் நடிக்கிறேனா ?… பிரபல நடிகை சொன்ன ‌பதில் !

சன் டிவியில் 90களின் இறுதியில் நம்பர் ஒன் சீரியலாக ஓடிக்கொண்டிருந்த சீரியல் சித்தி.நடிகை ராதிகா தயாரித்து நடித்திருந்த இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல ஆதரவை பெற்றிருந்தது. இல்லதரசிகள் விரும்பி பார்க்கும் சீரியலாக இருந்த இந்த சீரியலின் இரண்டாம் பாகம் சித்தி 2 என்ற பெயரில் கடந்த 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வந்தது.

ராதிகாவுக்கு பதில் நான் நடிக்கிறேனா ?… பிரபல நடிகை சொன்ன ‌பதில் !

கொரானாவுக்கு பிறகு இந்த சீரியலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த சீரியலில் ராதிகா அதே கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பொன்வண்னண் பதிலாக நிழல்கள் ரவி உள்ளிட்ட சில நடிகர், நடிகைகள் மாற்றப்பட்டனர்.மேலும் ப்ரீத்தி சர்மா, நந்தா லோகநாதன், தர்ஷனா ஸ்ரீபால் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரயலில் இருந்து திடீரென நடிகை ராதிகா விலகுவதாக அறிவித்தார்.இதனால் இல்லதரசிகள் அதிர்ச்சியடைந்தனர்.

ராதிகாவுக்கு பதில் நான் நடிக்கிறேனா ?… பிரபல நடிகை சொன்ன ‌பதில் !

இந்நிலையில் ராதிகாவுக்கு பதில் இந்த சீரியலில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.இதையடுத்து ராதிகா கேரக்டரில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடிக்கப்போவதாக தகவல் பரவியது.இது குறித்து பதிலளித்துள்ள வரலட்சுமி, சித்தி 2 சீரியலில் நான் நடிப்பதாக வந்த தகவல் வெறும் வதந்தி என்றும், அது தவறான தகவல் என்றும் கூறியுள்ளார்.

Share this story