விஜே சித்ரா படத்திற்கு ஸ்பெஷல் சலுகை… மகளிர் மட்டும் என்கிறது படக்குழு…

விஜே சித்ரா படத்திற்கு ஸ்பெஷல் சலுகை… மகளிர் மட்டும் என்கிறது படக்குழு…

விஜே சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படத்தை பார்க்க பெண்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜே சித்ரா படத்திற்கு ஸ்பெஷல் சலுகை… மகளிர் மட்டும் என்கிறது படக்குழு…

பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானவர் சித்ரா. பின்னர் தன்னுடைய கடின உழைப்பால் படிப்படியாக உயர்ந்து சின்னத்திரைக்கு சென்றார். தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலமே ரசிகர்களிடம் பரிச்சயமானார். அந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரம் சித்ராவுக்கு பெரும் புகழை தேடி தந்தது.

விஜே சித்ரா படத்திற்கு ஸ்பெஷல் சலுகை… மகளிர் மட்டும் என்கிறது படக்குழு…

தொடர்ந்து நடித்து வந்த சித்ரா திடீரென தற்கொலை செய்துக்கொண்டார். இந்த தற்கொலைக்கு சித்ராவின் கணவர் ஹோம்நாத் தான் காரணம் என கூறப்பட்டது. இருப்பினும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜே சித்ரா படத்திற்கு ஸ்பெஷல் சலுகை… மகளிர் மட்டும் என்கிறது படக்குழு…

சின்னத்திரையில் புகழ்பெற்றிருந்த சித்ரா, தன்னுடைய மரணத்திற்கு முன்பு வெள்ளித்திரையிலும் கால்பதித்திருந்தார். சபரிஷ் இயக்கத்தில் ‘கால்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன் , தேவதர்ஷினி , வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி ஆகிய திரைப்பிரபலங்கள் நடித்திருந்தனர்.

விஜே சித்ரா படத்திற்கு ஸ்பெஷல் சலுகை… மகளிர் மட்டும் என்கிறது படக்குழு…

ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று ‘கால்ஸ்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமான ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தை காண பெண்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்தை பார்க்கும் பெண்கள் இலவச படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this story