பணமதிப்பிழப்பு நடவடிக்கையை வைத்து பகடி செய்த அனுராக் காஷ்யப்… ‘சோக்டு’ பட விமர்சனம்!

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை வைத்து பகடி செய்த அனுராக் காஷ்யப்… ‘சோக்டு’ பட விமர்சனம்!

பெரும்பாலான அனுராக் காஷ்யப் படங்கள் சமூகத்தில் நடக்கும் அவலங்களை அதன் உணர்வுகள் மாறாமல் மக்களின் மனதில் கடத்தும் திறன் பெற்றவை. அதற்காக ரொம்ப மெனக்கெட்டு கதைகள் உருவாக்கப்படுவதில்லை. சமூகத்தில் நாம் அன்றாடம் பார்த்துவிட்டு கொண்டுகொள்ளாமல் சென்ற வாழ்க்கைமுறையை அவை விவரிப்பவையாக இருக்கும்.
தற்போது அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள ‘சோக்டு'(Choked) என்ற படம் நெட்பிலிக்ஸில் வெளியாகியுள்ளது. நிஹிட் பாவ் என்பவரின் கதையை அனுராக் இயக்கியுள்ளார்.
மிடில் கிளாஸ் குடும்பங்களுக்காவே உருவாக்கப்பட்ட ஒரு மேன்ஷனில் சரிதாவும், சுஷாந்த் பிள்ளையும் தங்கள் மகனோடு வாழ்ந்து வருகின்றனர். சரிதா கவர்மென்ட் பேங்கில் கேசியராக வேலை பார்க்கிறாள். சுஷாந்த் வேலை செய்யாமல் தன்னுடைய பேஷனுக்காக முயற்சிசெய்து வருகிறான். எனவே சரிதா தான் குடும்பத்தின் அனைத்து செலவுகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் வாழும் வீட்டின் சமையலறையில் அடிக்கடி சாக்கடை வெளியேறி வரும். இந்த காட்சி அவ்வப்போது காண்பிக்கப்படுவது, பின்னர் உண்மையாகவே சாக்கடை போன்ற ஒன்று வர இருப்பதை குறிப்பால் உணர்த்தியது போல் இருந்தது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை வைத்து பகடி செய்த அனுராக் காஷ்யப்… ‘சோக்டு’ பட விமர்சனம்!
சரிதா மற்றும் சுஷாந்தின் தோல்வியுற்ற கடந்தகால வாழ்க்கை அவ்வப்போது சரிதாவை மூச்சுத் திணற செய்கிறது. இப்படியாக இவர்கள் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கையில் ஒருநாள் நள்ளிரவில் அவர்கள் வீட்டு சாக்கடை கசிவதில் ரூபாய் நோட்டுகள் வெளிவருகின்றன. அதைக்  கண்டு அதிர்ச்சியடையும் சரிதா பணத்தை கணவனுக்கு  தெரியமால்  மறைத்து  வைக்கிறாள். இப்படி பல நாட்கள் தொடர்கிறது.
படத்தைப் பார்க்கும்போது தடை செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் என்று அனைவருக்கும் குழப்பம் ஏற்பட்டிருக்கும். அதற்கான காரணம் படத்தின் பின்னால் அனைவருக்கும் தெரியவரும்.
சாக்கடையிலிருந்து பணக்குவியல்  கிடைத்து வரும் மகிழ்ச்சியில் சில நாட்களை தொடர்கிறாள் சரிதா. பின்னர் திடீரென்று ஒருநாள் நள்ளிரவில் ஒரு அறிவிப்பு வருகிறது. அதிலிருந்து படம் வேறு கட்டத்திற்குள் நுழைகிறது. ஆம், நீங்கள் வைத்திருக்கும் ரூபாய் நோட்டுகள் அனைத்தும் இனிமேல் செல்லாத காகிதங்கள் என்று ஆகிவிட்டன என பணமதிப்பிழப்பு நடவடிக்கை மோடியால் அறிவிக்கப்படுவது காண்பிக்கப்படுகிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை வைத்து பகடி செய்த அனுராக் காஷ்யப்… ‘சோக்டு’ பட விமர்சனம்!
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஒரு நபர் இவ்வளவு தான் எடுக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. ஒரு காட்சியில் வயதான பெண்மணி ஒருவர் “இன்னும் கொஞ்சம் காசு வேணும் தேவைப்படுகிறது” என்று கேட்பார் அதற்கு “எங்களிடம் கேட்காதீர்கள் நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் அவர்களிடம் போய் கேளுங்கள்” என்று சரிதா கூறுவது அனைத்து மக்களின் விரக்தியின் வெளிப்பாடாக தோன்றியது.
ஒருநாள் தன் எடுத்துவைத்த மொத்த பழைய நோட்டுகளையும் பேங்கில் எப்படியாவது மாற்றி விடவேண்டும் என்று மொத்தமாக எடுத்து செல்கிறாள் சரிகா. திடீரென்று பேங்கிற்குள் நுழையும் ஒரு திருட்டு கும்பல் சரிதாவின் பணத்தோடு வங்கியில் உள்ள அனைத்து பணத்தையும் திருடிச் செல்கின்றனர். இத்தனை நாள் சேர்த்துவைத்த அனைத்து பணமும் ஒரேநாளில் போய்விட்டது அதிர்ச்சி அடைகிறாள்.
படம் ஆரம்பித்தது முதலே கதை எதை நோக்கி நகர்கிறது என்பது புலப்படாமலேயே உள்ளது. சரிதாவை மிரட்டி வரும் ஒருவர் கடைசியில் என்ன ஆனார் என தெரியவில்லை. பக்கத்து வீட்டு கதாபாத்திரங்கள் வடிவைப்பில் கொஞ்சம் சிறப்பு காட்டியுள்ளனர். ரோஷன் மற்றும் ஷையாமி கர் தங்கள் பகுதியை நிறைவாக செய்துள்ளனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை வைத்து பகடி செய்த அனுராக் காஷ்யப்… ‘சோக்டு’ பட விமர்சனம்!
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பட்ட அவதியை அப்படியே காண்பித்துள்ளனர். பணத்தின் மீதான பேராசை அதனால் ஏற்படும் விளைவுகளையும் கொஞ்சம் அலசியிருக்கிறார்கள். பின்னால் வரப்போகும் ஆபத்தை தெரிவிக்க தான், சாக்கடை வீட்டிற்குள் வருவது போல காண்பித்துள்ளனர். படத்தைப் பார்க்க கொஞ்சம் பொறுமை இருந்தால் நீங்கள் இந்த படத்தை உங்கள் லிஸ்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்!

Share this story