“பெரியவன் ஆகி என்ன ஆகப்போற”… மகனின் பதிலால் வாயடைத்துப் போன தோர் நடிகர்!

“பெரியவன் ஆகி என்ன ஆகப்போற”… மகனின் பதிலால் வாயடைத்துப் போன தோர் நடிகர்!

தோர் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தின் மகன், “பெரியவன் ஆகி என்ன ஆகப்போற?” என்ற கேள்விக்கு அளித்துள்ள பதில் மிகவும் வைரலாகி வருகிறது.

தோர் கதாபாத்திரத்தின் மூலம் உலகளவில் பிரபலமானவர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த். தற்போது பல மார்வல் படங்களிலில் நடித்து வருகிறார்.

“பெரியவன் ஆகி என்ன ஆகப்போற”… மகனின் பதிலால் வாயடைத்துப் போன தோர் நடிகர்!

தற்போது அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு மிகவும் வைரலாகி வருகிறது.

கிறிஸ் தனது மகனிடம் “நீ பெரியவன் ஆனதும் என்ன ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறாய்?” என்று கேட்டுள்ளார். அதற்கு அவரது மகன் “நான் சூப்பர் மேன் ஆக வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

இந்தப் பதிலைக் கேட்டு ஏமாற்றமடைந்த கிறிஸ், அதைத் தனது சமூக வலைத்தள பக்கம் வாயிலாக தெரிவித்துள்ளார். மேலும் நல்ல வேளையாக எனக்கு இன்னும் இரண்டு மகன்கள் உள்ளனர் என்று ஆறுதல் அடைவதாகவும் தெரிவித்துள்ளார். மார்வெல் ரசிகர்களுக்கும் டிசி ரசிகர்களுக்கும் நடந்து வரும் மோதல் உலகமறிந்தது தான். மார்வெல் ஹீரோவான தோரின் மகன் டிசியின் சூப்பர் மேன் ஆகவேண்டும் என்று கூறினால் எப்படி இருக்கும்? அந்த உணர்வைத் தான் கிறிஸ் வெளிப்படுத்தியுள்ளார்(நகைச்சுவையாக)

கிறிஸ் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவரது 7 வயது மகன் சூப்பர் மேன் உடை அணிந்துள்ளார். கிறிஸ் தற்போது தோர் படத்தின் நான்காம் பாகத்தில் நடித்து வருகிறார்.

Share this story