உற்சாகத்தில் நோலன் ரசிகர்கள்… இந்தியாவில் ‘டெனட்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

உற்சாகத்தில் நோலன் ரசிகர்கள்… இந்தியாவில் ‘டெனட்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

டெனெட் திரைப்படம் டைம் டிராவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பட்டின்சன், மைக்கல் கெய்ன், டிம்பில் கபாடியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கிறிஸ்டோபர் நோலன் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவரது படங்களைப் புரிந்துகொள்ளவே நாம் உட்கார்ந்து யோசிக்க வேண்டும். ஒருமுறை பார்த்தால் படம் புரிந்து விடாது. அந்தளவிற்கு நுட்பமான கதைகளை எடுப்பதில் கைதேர்ந்தவர் கிறிஸ்டோபர் நோலன்.

உற்சாகத்தில் நோலன் ரசிகர்கள்… இந்தியாவில் ‘டெனட்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!


தற்போது அவர் இயக்கியுள்ள டெனெட் படத்திற்கு உலகமெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இப்படம் வெளியாகியிருந்தாலும் பெரிய வசூலை ஈட்டியது.

முதலில் டெனெட் படம் அமெரிக்காவைத் தவிர்த்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆஸ்திரேலியா, கனடா, கொரியா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட 70 நாடுகளில் ஆகஸ்ட் 26ம் தேதி வெளியானது. இதையடுத்து ஒரு வாரம் கழித்து செப்டம்பர் 13 ஆம் தேதி அமெரிக்காவில் வெளியானது.

கிரிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெனட்’ படத்தின் இந்திய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள டெனட் திரைப்படம் வெளிநாடுகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Image

இந்தியாவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் டெனட் இந்தியாவில் எப்போது ரிலீஸ் ஆகும் என்று நோலன் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது டெனட் படக்குழு இந்தியா ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். டிசம்பர் 2-ம் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

Share this story