‘தல’ அஜித் கொடுத்த எதிர்பாராத அதிர்ச்சி! பிரமிப்பு விலகாத பிரபாஸ்!?

‘தல’ அஜித் கொடுத்த எதிர்பாராத அதிர்ச்சி! பிரமிப்பு விலகாத பிரபாஸ்!?

ஊர் உலகத்தில் இருக்கிற ஹீரோ, ஹீரோயின் பலருக்கும் ‘தல’ அஜித் கூட நடிக்கணும் என்று ஆசை இருப்பதாக சொல்லுவதைக் கேட்டிருக்கிறோம்

ஊர் உலகத்தில் இருக்கிற ஹீரோ, ஹீரோயின் பலருக்கும் ‘தல’ அஜித் கூட நடிக்கணும் என்று ஆசை இருப்பதாக சொல்லுவதைக் கேட்டிருக்கிறோம்; பார்த்திருக்கிறோம்.ஆனால், தல யார் கூட நடிக்க விருப்படுவதாக சொல்லியிருக்கிறார் பாருங்க!

போனிகபூர் தயாரிப்பில்,இயக்குனர் வினோத் இயக்கும் ‘தல 59’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, அவருடைய ஃபேவரைட் ஸ்டுடியோவான ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருக்கிறது. சவுத் இந்தியாவிலேயே மிகப் பெரிய ஸ்டுடியோ அதுதான். அதனால், ஒரே நேரத்தில் பல்வேறு படப்பிடிப்புகள் நடப்பது வழக்கம்.

‘தல’ அஜித் கொடுத்த எதிர்பாராத அதிர்ச்சி! பிரமிப்பு விலகாத பிரபாஸ்!?

படப்பிடிப்புக்கு போன இரண்டாவது நாள்தான் இயக்குனர் பிரிதர்சன் இயக்கத்தில் மோகன் லால் நடிக்கும் ‘அரபிக்கடலிண்ட சிம்ஹம்’ படப்பிடிப்பு நடக்கும் தகவல் கிடைத்திருக்கிறது.அழைப்பு இல்லாமலேயே அவர்களைத் தேடிப்போய் பார்த்திருக்கிறார். அவர்களின் உரையாடலுக்கு நடுவே பக்கத்து செட்டில்தான் பிரபாஸ் படமும் நடக்கிறது என்று லாலேட்டன் சொல்ல ‘தல’ அந்த செட்டிற்கும் போய் பிரபாஸைப் பார்த்திருக்கிறார்.

‘தல’ அஜித் கொடுத்த எதிர்பாராத அதிர்ச்சி! பிரமிப்பு விலகாத பிரபாஸ்!?

இதை சற்றும் எதிர்பார்க்காத பிரபாஸ், ‘தல’-யை ஓடி வந்து கட்டிப்பிடித்து அழைத்துப் போயிருக்கிறார். இரண்டு இடத்திலும் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தாராம் தல. அங்கிருந்து விடை பெரும் போது, லால் -பிரபாஸ் இருவரிடமும் தனித்தனியாக சொன்ன செய்தி-’நாம சேர்ந்து நடிக்கணும்’!

நாங்க வெயிட்டிங் பாஸ்…

Share this story