பாலியல் குற்றவாளிக்கு பாதுகாப்பா? மலையாள நடிகர் சங்கத்தை விளாசும் ரீமா கல்லிங்கல்!

பாலியல் குற்றவாளிக்கு பாதுகாப்பா? மலையாள நடிகர் சங்கத்தை விளாசும் ரீமா கல்லிங்கல்!

மலையாள நடிகை பாலியல் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகர் தீலிப்பிற்கு நடிகர் சங்கம் ஆதரவளித்து வருவதாக நடிகை ரீமா கல்லிங்கல் குற்றம்சாட்டியுள்ளார்.

கொச்சி: மலையாள நடிகை பாலியல் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகர் தீலிப்பிற்கு நடிகர் சங்கம் ஆதரவளித்து வருவதாக நடிகை ரீமா கல்லிங்கல் குற்றம்சாட்டியுள்ளார்.

கேரளாவில் நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’-வில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.  சமீபத்தில் அம்மா-வின் புதிய தலைவராக பொறுப்பேற்ற நடிகர் மோகன்லால், மீண்டும் திலீப்பை இணைத்துக் கொண்டார். இதற்கு மலையாள நடிகைகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து, சங்கத்தில் இருந்து விலகினர்.

இந்நிலையில், நடிகர் திலீப்பிடம் ரஜினாமா கடிதத்தை பெற்றுக் கொண்டு அவரை மீண்டும் அம்மா-வில் இருந்து நீக்கினர். மேலும், ராஜினாமா செய்து சங்கத்தில் இருந்து விலகிய நடிகைகள் மீண்டும் இணைந்துக் கொள்ளலாம் என மோகன்லால் அறிவித்தார்.

இது குறித்து மலையாள முன்னணி நடிகை ரீமா கல்லிங்கல், ‘பாலியல் குற்றவாளியான நடிகர் திலீப்புக்கு மலையாள நடிகர் சங்கம் பாதுகாப்பு அளிக்கிறது. நடிகர்-நடிகைகளின் நலனுக்காக இருக்க வேண்டிய சங்கம் அவ்வாறு இல்லை. நான் மீண்டும் மலையாள நடிகர் சங்கத்தில் இணையப்போவதில்லை. சினிமா வாய்ப்பு இல்லாமல் ஒதுங்கிய நடிகர்களின் நலனுக்காகவே இந்த சங்கம் செயல்படுகிறது. சங்கத்தில் இல்லாமல் சினிமாவில் இருப்பவர்கள் பலர் உள்ளனர். அவர்களுடன் இணைந்து இருப்பேன்’ என ரீமா தெரிவித்துள்ளார்.

Share this story