புத்தாண்டில் ரிலீசாகும் ‘சூர்யா 37’ டைட்டில்..!

புத்தாண்டில் ரிலீசாகும் ‘சூர்யா 37’ டைட்டில்..!

நடிகர் சூர்யா நடித்து வரும் புதுப்படம் குறித்த முக்கிய் அறிவிப்பு புத்தாண்டு இரவில் வெளியாகவுள்ளது.

சென்னை: நடிகர் சூர்யா நடித்து வரும் புதுப்படம் குறித்த முக்கிய் அறிவிப்பு புத்தாண்டு இரவில் வெளியாகவுள்ளது.

‘அயன்’, ‘மாற்றான்’ திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சூர்யா 37’ திரைப்படத்தின் டைட்டில் குறித்த தகவலை இயக்குநர் கே.வி.ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவரது ட்வீட்டில் சூர்யா 37 படத்திற்கு ஏற்ற வகையில் ‘மீட்பான்’, ‘காப்பான்’, ‘உயிர்கா’ ஆகிய 3 டைட்டில்களை பகிர்ந்து, இதில் எந்த டைட்டிலை தேர்வு செய்யலாம் என ரசிகர்களின் விருப்பத்தை கேட்டிருந்தார்.

இந்த மூன்றில் சூர்யா ரசிகர்களின் விருப்பமான அந்த தலைப்பு எது என்பதை ‘சூர்யா 37’ படக்குழு வரும் புத்தாண்டன்று நள்ளிரவு 12.10 மணிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

சூர்யா, மோகன்லால், ஆர்யா, போமன் இராணி, சாயீஷா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள வரும் இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் லண்டனில் தொடங்கி இரண்டாவது கட்ட ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளது. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் நடிகர் சூர்யா தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோவாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

Share this story