மீ டூ ஃபேஷனாகிவிட்டது: மோகன்லால் சர்ச்சை கருத்து!

மீ டூ ஃபேஷனாகிவிட்டது: மோகன்லால் சர்ச்சை கருத்து!

மீ டூ இயக்கும் தற்போது ஃபேஷனாகிவிட்டதாக மலையாள நடிகர் மோகன்லால் சர்ச்சைகுரிய கருத்தை பகிர்ந்துள்ளார்.

திருவனந்தபுரம்: மீ டூ இயக்கும் தற்போது ஃபேஷனாகிவிட்டதாக மலையாள நடிகர் மோகன்லால் சர்ச்சைகுரிய கருத்தை பகிர்ந்துள்ளார்.

உலகளாவிய மீ டூ பிரசாரத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையாக பேசினர். ஹாலிவுட்டை தொடர்ந்து இந்திய சினிமாவில் விஸ்வரூபம் எடுத்த இவ்விவகாரம் தமிழ் திரையுலகிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. முன்னணி பிரபலங்கள் பலர் மீது பாலியல் புகார்கள் தெரிவிக்கப்பட்டு சர்ச்சையானது.

இந்நிலையில், மலையாள நடிகர் மோகன்லால், பாலியல் துன்புறுத்தல் குறித்த குற்றச்சாட்டுகள் உள்நோக்கம் கொண்டவை என கருத்து கூறியிருப்பதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன.

மலையாள திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் யாருக்கும் கிடையாது. மீ டூ-வை ஒரு இயக்கமாக கருதக்கூடாது. அது உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது. பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறுவது ஒரு ட்ரெண்டாக ஃபேஷனாகிவிட்டது என்று மோகன்லால் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு பாலியல் தொல்லை என்பது திரைத்துறையில் மட்டுமில்லை, மற்ற இடங்களிலும் நடக்கும் சம்பவம் தான் என மோகன்லால் தெரிவித்துள்ளார்.

Share this story