மீ டூ ஃபேஷனா?: மோகன்லாலை விளாசிய ரேவதி!

மீ டூ ஃபேஷனா?: மோகன்லாலை விளாசிய ரேவதி!

மீ டூ இயக்கம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகர் மோகன்லாலை நடிகை ரேவதி விளாசியுள்ளார்.

திருவனந்தபுரம்: மீ டூ இயக்கம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகர் மோகன்லாலை நடிகை ரேவதி விளாசியுள்ளார்.

உலகளாவிய மீ டூ பிரசாரத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையாக பேசினர். ஹாலிவுட்டை தொடர்ந்து இந்திய சினிமாவில் விஸ்வரூபம் எடுத்த இவ்விவகாரம் தமிழ் திரையுலகிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. முன்னணி பிரபலங்கள் பலர் மீது பாலியல் புகார்கள் தெரிவிக்கப்பட்டு சர்ச்சையானது.

இந்நிலையில், மலையாள நடிகர் மோகன்லால், மீ டூ என்பது ஃபேஷனாகிவிட்டது. உள்நோக்கம் கொண்ட இந்த இயக்கம் விரைவில் காணாமல் போய்விடும் என்று மோகன்லால் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மோகன்லாலின் இந்த கருத்து மலையாள நடிகைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், நடிகை ரேவதி, பெயர் குறிப்பிடாமல் மோகன்லாலின் சர்ச்சை கருத்தை விளாசியுள்ளார். உணர்வுகள் சம்மந்தப்பட்ட விஷயத்தை சிலருக்கு எப்படி கற்றுத் தருவது? ஒரு பிரபல நடிகர், மீ டூ என்பது ட்ரெண்ட் என சொல்கிறார். இயக்குநர் அஞ்சலி மேனன் கூறியது போல், செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியும், அதை வெளியே சொல்வதனால் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் தெரியாது’ என்று கூறியுள்ளார்.

நடிகை ரேவதியின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

Share this story