வரவேற்பை பெற்ற ”விடுதலை” போஸ்டர்… சூரிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து…

வரவேற்பை பெற்ற ”விடுதலை” போஸ்டர்…  சூரிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து…

வெற்றிமாறனின் ‘விடுதலை’ போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சூரிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ‌உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வரவேற்பை பெற்ற ”விடுதலை” போஸ்டர்…  சூரிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து…

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து உருவாகி வரும் ‌திரைப்படம் ‘விடுதலை’. பல வெற்றிப் படங்களை இயக்கிய வெற்றிமாறன் தற்போது சூரியை வைத்து இந்த படத்தை எடுத்து வருகிறார். சூரியுடன் இணைந்து நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்துள்ளார்.

வரவேற்பை பெற்ற ”விடுதலை” போஸ்டர்…  சூரிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து…

இளையராஜா இசையில் இந்தப் படம் உருவாகி வருகிறது. நடிகர் கிஷோர் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கும் இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சத்தியமங்கலம் காடுகளில் கடும் குளிரில் படமாக்கப்பட்டு வந்தது.இதையடுத்து இரண்டாம் கட்ட ஷூட்டிங் செங்கல்பட்டு அருகே நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இறுதிக்கட்ட ஷூட்டிங் நடைபெற்று வரும்‌ இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதில் கைதியாக விஜய் சேதுபதியும், போலீசாக சூரியும் இருப்பது போன்று போஸ்டரில் இடம்பெற்றிருந்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு நன்றி தெரிவித்து டிவிட்டரில் சூரி பதிவிட்டிருந்தார்.அதில் ”என் வாழ்வில் இந்த முக்கிய தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்த அண்னண் இயக்குனர் வெற்றிமாறனுக்கும், இசைஞானி ஐயா இளையராஜா அவர்களுக்கும் நன்றி” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த பதிவுக்கு ரீ ட்வீட் செய்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். அதில் ‘மட்டற்ற, மகிழ்ச்சியும், வாழ்த்துகளும்’ என்று குறிப்பிட்டுள்ள அவர், நடிகர் சூரி, இயக்குனர் வெற்றிமாறன், இசைஞானி இளையராஜா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதேபோன்று நடிகர் சசிகுமார், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Share this story