‘அண்ணாத்த’ படத்தை முடித்து விரைவில் அமெரிக்கா பறக்கும் ரஜினி…

‘அண்ணாத்த’ படத்தை முடித்து விரைவில் அமெரிக்கா பறக்கும் ரஜினி…

‘அண்ணாத்த’ படத்தை முடித்து நடிகர் ரஜினி விரைவில் அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘அண்ணாத்த’ படத்தை முடித்து விரைவில் அமெரிக்கா பறக்கும் ரஜினி…

சூப்பர் ஸ்டார் ரஜினி – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வருகிறது ‘அண்ணாத்த’ . வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளியையொட்டி ரிலீசாக இருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது. இந்த ஷூட்டிங்கில் ரஜினி சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டன.

‘அண்ணாத்த’ படத்தை முடித்து விரைவில் அமெரிக்கா பறக்கும் ரஜினி…

இறுதிக்கட்டமாக நடைபெறும் இந்த ஷூட்டிங்கில்  ரஜினியுடன்  இணைந்து நயன்தாராவும் நடித்து வருகிறார். கொரானா தொற்று அதிகரித்து வருவதால் ஷூட்டிங்கை மிகவும் பாதுகாப்பாக நடத்தி வருகின்றனர் படக்குழுவினர். பிபி கிட் அணிந்துகொண்டுதான் தொழில்நுட்ப கலைஞர்கள் ஷூட்டிங்கில் கலந்துக்கொள்கின்றனர். குறிப்பாக ரஜினிக்கு இந்த ஷூட்டிங்கில் மிகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

‘அண்ணாத்த’ படத்தை முடித்து விரைவில் அமெரிக்கா பறக்கும் ரஜினி…

இந்நிலையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் சில நாட்களில் முடியவுள்ளது. இதையடுத்து சென்னைக்கு திரும்பும் ரஜினி, டப்பிங் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறார். இந்த மாத இறுதிக்குள் ‘அண்ணாத்த’ தொடர்பாக அனைத்து வேலைகளை முடித்து ஜுன் முதல் வாரத்தில் தனது மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினியின் மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோர் அமெரிக்காவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story