பிரபுதேவா, பங்காரு அடிகளார் உள்ளிட்ட 56 பேருக்கு பத்ம விருது: வேட்டி கட்டி வந்து அசத்திய பிரபுதேவா; புகைப்படங்கள் உள்ளே!

பிரபுதேவா, பங்காரு அடிகளார் உள்ளிட்ட 56 பேருக்கு பத்ம விருது: வேட்டி கட்டி வந்து அசத்திய பிரபுதேவா; புகைப்படங்கள் உள்ளே!

பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசு தலைவர்கள் மாளிகையில் இன்று கோலாகலமாக நடந்தது. இந்த விழாவில் மொத்தம் 56 பேருக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன.

புதுடெல்லி: பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசு தலைவர்கள் மாளிகையில் இன்று கோலாகலமாக நடந்தது.  இந்த விழாவில் மொத்தம் 56 பேருக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன. 

பத்ம விருதுகள் வழங்கும் விழா:

பிரபுதேவா, பங்காரு அடிகளார் உள்ளிட்ட 56 பேருக்கு பத்ம விருது: வேட்டி கட்டி வந்து அசத்திய பிரபுதேவா; புகைப்படங்கள் உள்ளே!

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சமூக சேவை, கலை, மருத்துவம், பொறியியல், இலக்கியம் உள்ளிட்டவை அடங்கும்.  அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம விருது பெறுபவர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

பத்ம ஸ்ரீ விருதுகள்:

பிரபுதேவா, பங்காரு அடிகளார் உள்ளிட்ட 56 பேருக்கு பத்ம விருது: வேட்டி கட்டி வந்து அசத்திய பிரபுதேவா; புகைப்படங்கள் உள்ளே!

இந்நிலையில் டெல்லியில் உள்ள குடியரசு தலைவர்கள் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று கோலாகலமாக நடந்தது.  இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகஸ்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில், டேபிள் டென்னி வீரர் சரத் கமல், அறுவை சிகிச்சை நிபுணர் ராமசாமி வெங்கடசாமி, கண் மருத்துவ நிபுணர் ஆர்.வி. ரமணி, டிரம்ஸ் கலைஞர் சிவமணி, நாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜ், நடிகர் பிரபுதேவா, பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவன் உள்ளிட்டோருக்குப் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து,  பங்காரு அடிகளார், கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர், கால்பந்து வீரர் சுனில் சேத்ரி, முன்னாள் வெளியுறவு செயலர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம ஸ்ரீ விருதுகளை வழங்கி கௌரவித்தார். 

பத்மபூஷண் விருது:

பிரபுதேவா, பங்காரு அடிகளார் உள்ளிட்ட 56 பேருக்கு பத்ம விருது: வேட்டி கட்டி வந்து அசத்திய பிரபுதேவா; புகைப்படங்கள் உள்ளே!

நடிகர் மோகன்லால், விண்வெளித்துறை விஞ்ஞானி நம்பி நாராயணன், காலம் சென்ற பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் ஆகியோருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. 

விருதுப் பட்டியலில் எஞ்சியவர்களுக்கு மார்ச் 16-ம் தேதி நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் கலந்து கொண்ட பிரபுதேவா வேட்டி அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
 
Share this story