34 வருடம் கழித்து மோகன்லாலுடன் இணைந்த ராதிகா

34 வருடம் கழித்து மோகன்லாலுடன் இணைந்த ராதிகா

நடிகை ராதிகா 34 வருடம் கழித்து நடிகர் மோகன்லாலுடன் இணைந்து புதிய படம் நடிக்கவுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகை ராதிகா 34 வருடம் கழித்து நடிகர் மோகன்லாலுடன் இணைந்து புதிய படம் நடிக்கவுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

தென்னிந்தியத் திரைப்பட நடிகை,தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் ராதிகா. நடிப்பு மட்டுமின்றி தன்னுடைய ராடன் தயாரிப்பு நிறுவனம் மூலமாக, பல நெடும் தொடர்களை உருவாக்கியவர். இவர் தற்போது தொலைக்காட்சியில் அதிகம் கவனம் செலுத்தி வந்தாலும்,அவ்போது சில படங்களிலும்  நடித்து வருகிறார்.

இவர் 1993ம் ஆண்டில் வெளியான  ‘அர்த்தனா’ படம்  மூலம் மலையாளத்தில் நடிக்க தொடங்கினர். பின்பு நீண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த 2017ம் ஆண்டு ‘ராம்லீலா’ படத்தில் நடித்து இருந்தார். அதையடுத்து மலையாளத்தில் பட வாய்ப்புகள் அதிகம் வரதொடங்கிய நிலையில் ‘தி கேம் பினோஸ்’ படத்தில் பெண் தாதாவாக நடித்துவருகிறார்.

இந்நிலையில் நடிகை ராதிகா 34 வருடம் கழித்து மோகன்லாலுடன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடைசியாக இவர்கள் சேர்ந்து நடித்த ‘கூடம் தேடி’ படத்திற்கு பிறகு இட்டிமானி மேட் இன் சைனா படத்தில் நடிக்கவுள்ளனர். 

Share this story