அஜித்தின் அடுத்த மூன்று படத்தின் இயக்குனர்கள் யார் தெரியுமா ?.. வெளியான புதிய தகவல்…

அஜித்தின் அடுத்த மூன்று படத்தின் இயக்குனர்கள் யார் தெரியுமா ?.. வெளியான புதிய தகவல்…

அஜித் நடிக்கும் அடுத்த மூன்று படங்களின் இயக்குனர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் அடுத்த மூன்று படத்தின் இயக்குனர்கள் யார் தெரியுமா ?.. வெளியான புதிய தகவல்…

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜீத் – வினோத் கூட்டணியில் உருவாகும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடித்துள்ளார். அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் 95 சதவீத பணிகள் நிறைவுபெற்று விட்டன. படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் கடந்த மே 1ம் தேதி வெளியாக இருந்த நிலையில் கொரானா காரணமாக வெளியாகவில்லை. இதனால் அஜீத் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

அஜித்தின் அடுத்த மூன்று படத்தின் இயக்குனர்கள் யார் தெரியுமா ?.. வெளியான புதிய தகவல்…

வலிமைப்படத்திற்கு பிறகு அஜீத்தின் மூன்றாவது படத்தையும் எச்.வினோத் தான் இயக்கப்போகிறார் என்பது தெரிந்த விஷயம். ‘வலிமை’ படத்தின் ஷூட்டிங் நடக்கும்போது இடைவேளை நேரத்தில் இந்த படம் குறித்த ஒன் லைன் கதையை கூறிவிட்டாராம் வினோத். அந்த கதை அஜித்துக்கு ஓகே என்பதால் வலிமை படம் முடித்த கையோடு அந்த படத்தின் பணிகளை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தையும் போனி கபூர்தான் தயாரிக்க உள்ளார்.

அஜித்தின் அடுத்த மூன்று படத்தின் இயக்குனர்கள் யார் தெரியுமா ?.. வெளியான புதிய தகவல்…

இதேபோன்று ‘சூரரைப்போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்குகரா இரண்டு முறை நடிகர் அஜீத்தை சந்தித்துள்ளார். அப்போது ஒரு வித்தியாசமாக கதையை கூறியிருக்கிறார் சுதா. அந்த கதை அஜீத்துக்கு பிடித்துவிடவே, சுதா கொங்குகராவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதிய தகவலாக ஐந்தாவது முறையாக சிறுத்தை சிவாவுடன் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே அஜித்தை வைத்து வேதாளம், வீரம், விவேகம், விஸ்வாசம் போன்ற வெற்றி படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story