ரஜினியை இயக்குகிறாரா தனுஷ் ? பரபரக்கும் பின்னணி !

ரஜினியை இயக்குகிறாரா தனுஷ் ? பரபரக்கும் பின்னணி !

ரஜினியின் அடுத்த படத்தை நடிகர் தனுஷ் இயக்கவிருப்பதாக கோலிவுட்டில் தீயாய் ஒரு செய்தி பரவி வருகிறது.

ரஜினியை இயக்குகிறாரா தனுஷ் ? பரபரக்கும் பின்னணி !

ரஜினி -சிறுத்தை சிவா இயக்கத்தில் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது  ‘அண்ணாத்த’. கூட்டு குடும்ப பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகை நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, ஜெகபதி பாபு, சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்து வருகிறார்.

ரஜினியை இயக்குகிறாரா தனுஷ் ? பரபரக்கும் பின்னணி !

வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளியையொட்டி ரிலீசாக இருக்கிற இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. ஒரு மாதம் வரை நடைபெற்ற இந்த ஷூட்டிங்கில் ரஜினி நடிக்க வேண்டிய முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. இதை முடித்து நேற்று முன்தினம் சென்னை திரும்பினார் ரஜினி. தற்போது இந்த படத்தின் போஸ்ட் பிரொக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளது.

ரஜினியை இயக்குகிறாரா தனுஷ் ? பரபரக்கும் பின்னணி !

இதையடுத்து ‘அண்ணாத்த’ படத்தில் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை ஆரம்பிக்க உள்ளார் நடிகர் ரஜினி. இதற்கிடையே ரஜினியின் அடுத்த படத்தை இயக்க உள்ளது யார் என்பது சஸ்பென்ஸாக இருந்து வருகிறது. அதேநேரம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனர் தேசிங்கு பெரியசாமி அடுத்த படத்தை இயக்கவிருப்பதாக ஒரு தகவல் வெளியானது. இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை நடிகர் தனுஷ் இயக்கவிருப்பதாக கோலிவுட்டில் ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது. ரஜினி அமெரிக்கா சென்றுவிட்டு, திரும்பிய பிறகு இந்த படத்தின் பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது. இதனால் சினிமா வட்டாரத்தில் ஒரு பரபரப்பு நிலவி வருகிறது.

Share this story