முதல்வர் ஸ்டாலினை, தனது தந்தையுடன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ஜீவா

முதல்வர் ஸ்டாலினை, தனது தந்தையுடன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ஜீவா

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தனது தந்தையுடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் ஜீவா.

முதல்வர் ஸ்டாலினை, தனது தந்தையுடன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ஜீவா

தமிழகத்தின் 23வது முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே நடிகர்கள் விஷால், சந்தானம், ஜீவா, சூரி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து நடிகர் அருண் விஜய், அவரது தந்தை விஜய்குமார், இயக்குனர் ஹரி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினை, தனது தந்தையுடன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ஜீவா

இதேபோன்று சமூக வலைத்தளம் வாயிலாக நடிகர்கள் சிவகுமார், சூர்யா, செந்தில், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினை, நடிகர் ஜீவா, அவரது தந்தையும், தயாரிப்பாளருமான ஆர்.பி.செளத்ரி ஆகிய இருவரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது நடிகர் உதயநிதியும் உடனிருந்தார்.

Share this story