ஸ்டாலின், உதயநிதியை சந்தித்த நடிகர் சந்தானம்…முதலமைச்சரானதற்கு வாழ்த்து!…

ஸ்டாலின், உதயநிதியை  சந்தித்த நடிகர் சந்தானம்…முதலமைச்சரானதற்கு வாழ்த்து!…

தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் சந்தானம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சராக தேர்வாகி உள்ளார் மு.க.ஸ்டாலின். முதல்முறையாக முதல்வராக தேர்வாகி உள்ள ஸ்டாலினுக்கு அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள், சினிமா‌ நட்சத்திரங்கள், தொண்டர்கள் என பலதரப்பு மக்களும் வாழ்ந்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக நடிகர்கள் சூர்யா, சிவகுமார்,செந்தில், இயக்குனர்கள் பாக்யராஜ், ஷங்கர் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் சமூக வலைத்தளம் மூலமாக வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து நடிகர்கள் விஷால், விஜயகுமார், விஷ்ணு விஷால்,அருண் விஜய், இயக்குனர் ஹரி உள்ளிட்டோர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஸ்டாலின், உதயநிதியை  சந்தித்த நடிகர் சந்தானம்…முதலமைச்சரானதற்கு வாழ்த்து!…

இந்நிலையில் முதல்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினை, அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நடிகர் சந்தானம் வாழ்த்து தெரிவித்தார். இதேபோன்று சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக தேர்வான உதயநிதி ஸ்டாலினுக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மாபெரும் வெற்றிப்பெற்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தேன்.

இதேபோன்று சேப்பாக்கம்‌ தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ள எனது நண்பர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன் என்று பதிவிட்டுள்ளார். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘நண்பேன்டா’, ‘இது கதிர்வேலன் காதல்’, ஆகிய படங்களில் நடிகர் சந்தானமும், உதயநிதியும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story