“கொரோனா ரொம்ப டேஞ்சரஸ் ஃப்ளோ” – நடிகர் சென்றாயன் கதறல்

“கொரோனா ரொம்ப டேஞ்சரஸ் ஃப்ளோ” – நடிகர் சென்றாயன் கதறல்

கொரானாவிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி நடிகர் சென்றாயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சென்றாயன். ‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். அவரின் வித்தியாசமான பேச்சால் அனைவரின் கவத்தை பெற்றார். திரைப்படங்களில் நடித்து வந்த சென்றாயன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

“கொரோனா ரொம்ப டேஞ்சரஸ் ஃப்ளோ” – நடிகர் சென்றாயன் கதறல்

இந்நிலையில் சென்றாயனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார். தனக்கு கொரானா ஏற்பட்டது குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை சென்றாயன் வெளியிட்டுள்ளார். அதில் சினிமாவில் ஜெயிக்கணும் என்று எப்போதும் வாழ்க்கையை பாசிடிவாக இருப்பவன் நான். ஆனா எனக்கே இப்போது கொரானா தொற்று பாதிப்பு வந்துருச்சி. ஆரம்பத்தில் கொரோனா குருமா என கவனக்குறைவாக இருந்தேன்.

“கொரோனா ரொம்ப டேஞ்சரஸ் ஃப்ளோ” – நடிகர் சென்றாயன் கதறல்

ஆனால் எனக்கு இப்போது கொரானா தாக்கியுள்ளது. தற்போது என் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். ‘கொரோனா ரொம்ப டேஞ்சரஸ் ஃப்ளோ.. மக்களே’. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருங்கள் என பொதுமக்களை வலியுறுத்யுள்ளார். 

Share this story