தமிழில் படித்தால் நிச்சயம் அரசு வேலை… ஸ்டாலினுக்கு நடிகர் சிவகுமார் கோரிக்கை!

தமிழில் படித்தால் நிச்சயம் அரசு வேலை… ஸ்டாலினுக்கு நடிகர் சிவகுமார் கோரிக்கை!

நடிகர் சிவகுமார் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சில கோரிக்கைகள் வைத்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து முக ஸ்டாலின் இன்று முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். பொறுப்பேற்ற உடன் பெண்களுக்கு பேருந்தில் இலவச கட்டணம், கொரோனா செலவை அரசு ஏற்கும் உள்ளிட்ட அதிரடியான 5 திட்டங்களை நிறைவேற்றி கையெழுத்திட்டுள்ளார்.

தமிழில் படித்தால் நிச்சயம் அரசு வேலை… ஸ்டாலினுக்கு நடிகர் சிவகுமார் கோரிக்கை!

முக ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகுமார் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன் சில கோரிக்கைகளையும் வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்

“தமிழ் வழியில் படித்தால்தான் நிச்சயம் வேலை உண்டு என்ற முறையை உண்டாக்கினால் தமிழ் நிச்சயமாக வாழும். ஏரி, குளங்களைப் பராமரித்து விவசாயம் செழிக்க உதவி செய்யுங்கள். கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்திய உழவர் சந்தைக்கு உயிர் கொடுங்கள். அரசியல் சாணக்கியர் கலைஞர் அவர்களின் மடியில் வளர்ந்த நீங்கள், தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சியிதான் பொற்காலம் என்று சொல்வதுபோல் ஒரு நல்லாட்சியை வழங்குங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

Share this story