ஊரடங்கில் தன் காளையுடன் கெத்தாக வலம் வரும் நடிகர் சூரி….

ஊரடங்கில் தன் காளையுடன் கெத்தாக வலம் வரும் நடிகர் சூரி….

பரோட்டா சூரியாக அனைவராலும் அறியப்பட்டவர் நடிகர் சூரி.. மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர், தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக அசத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் வீட்டில் குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வரும் சூரி, குழந்தைகளுடன் சேர்ந்து  விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு  வந்தார்.
ஊரடங்கில் தன் காளையுடன் கெத்தாக வலம் வரும் நடிகர் சூரி….

சூரி தற்போது, ரஜினிகாந்த்தின் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். அதே சமயம், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் ஹீரோவாகவும் அறிமுகமாக இருக்கிறார். தனது பாணியில் நகைச்சுவையாக வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்த அவர் தற்போது மதுரைக்கு அருகிலுள்ள தனது சொந்த ஊரில் தங்கியிருக்கிறார்.
ஊரடங்கில் தன் காளையுடன் கெத்தாக வலம் வரும் நடிகர் சூரி….
சில நாட்கள் சமூக வலைதளங்களில் தலைக்காட்டாமல் இருந்த வந்த அவர்,  தனது ஜல்லிக்கட்டு காளையுடன் வலம் வரும் மாஸான புகைப்படங்கள் பதிவிட்டிருக்கிறார். கேப்ஷனாக,  “ஊரடங்குக்கு நடுவுல ஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா!!” என்று குறிப்பிட்டுள்ளார்.அவர் காளையை குளிக்க வைப்பதற்காக அழைத்துச் செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் போல் தெரிகிறது.. அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
 

Share this story