முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் விஷால் வாழ்த்து!…

முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் விஷால் வாழ்த்து!…

தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோகமாக வெற்றிப் பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தமிழகத்தின் 23வது முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற எளிமையான விழாவில் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்ற முதல் நாளிலேயே 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.

முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் விஷால் வாழ்த்து!…

இந்த இக்கட்டான சூழ்நிலையில் முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.ஏற்கனவே நடிகர்கள் சூர்யா, சிவகுமார்,செந்தில், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் விஷால் வாழ்த்து!…

இந்நிலையில் நடிகர் விஷாலும் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக முதல்முறையாக தேர்வாகியுள்ள நடிகர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது விஷாலுடன் நடிகர் ரமணாவும் உடனிருந்தார்.

Share this story