கொரானா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை ஜனனி

கொரானா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை ஜனனி

கொரானா தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் நடிகை ஜனனி தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

கொரானா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை ஜனனி

தமிழ் திரையுலகில் ‘திரு திரு துரு துரு’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஜனனி. இந்தப் படத்தை அடுத்து பாலா இயக்கத்தில் வெளியான ‘அவன் இவன்’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் தெகிடி, அதே கண்கள், தர்மப்பிரபு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கொரானா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை ஜனனி

தற்போது பிரபுதேவாவுடன் பஹிரா, பரத்துடன் முன்னறிவான், வேழம் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையே கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று 4வது இடத்தை பிடித்தார். தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களிடையே புகழ்பெற்று அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

கொரானா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை ஜனனி

இந்நிலையில் கொரானா தொற்று காரணமாக திரைப்பிரபலங்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஜனனி தனது முதல் டோஸ் தடுப்பூசியை இன்று போட்டுக்கொண்டார். தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டுள்ளார்.  

Share this story