செம ஸ்டைலிஷ்ஷாக மாறிய ரம்யா பாண்டியன்.. வைரலாகும் புகைப்படங்கள் !

செம ஸ்டைலிஷ்ஷாக மாறிய ரம்யா பாண்டியன்.. வைரலாகும் புகைப்படங்கள் !

நடிகை ரம்யா பாண்டியனின் செம ஸ்டைலிஷ்ஷான போட்டோஷூட் ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

செம ஸ்டைலிஷ்ஷாக மாறிய ரம்யா பாண்டியன்.. வைரலாகும் புகைப்படங்கள் !

தமிழ் திரையுலகில் கவர்ச்சிக்கரமான நடிகையாக மாறியுள்ளார் ரம்யா பாண்டியன். ஒரு குறும்படத்தின் மூலம் சினிமாவுக்குள் வந்த அவர், ‘கூந்தலும் மீசையும்’, ‘டம்மி டப்பாசு’ ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்களுக்கு போதிய வரவேற்பு இல்லை என்றாலும், ரம்யா பாண்டியன் நடித்த ‘ஜோக்கர்’ திரைப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றது.

செம ஸ்டைலிஷ்ஷாக மாறிய ரம்யா பாண்டியன்.. வைரலாகும் புகைப்படங்கள் !

அதன்பின்னர் மொட்டை மாடியில் இடுப்பு தெரியுமாறு புடவையில் ரம்யா வெளியிட்ட போட்டோஷூட் ஒன்று இணையத்தைக் கலக்கியது. இந்த போட்டோஷூட் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இந்த புகழை வைத்து விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக நுழைந்தார். ஆரம்பத்தில் பெரிய வரவேற்போடு இருந்த ரம்யாவுக்கு, போட்டி முடியும்போது ஏராளமான எதிர்மறை விமர்சனங்களுக்கு ஆளானார். இருந்தப்போதிலும் தனிக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார் ரம்யா பாண்டியன்.

செம ஸ்டைலிஷ்ஷாக மாறிய ரம்யா பாண்டியன்.. வைரலாகும் புகைப்படங்கள் !

சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன், அவ்வெவ்போது தனது போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று புதிய போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார் ரம்யா. அதில் செம ஸ்டைலிஷ்ஷாக தோன்றிய ரம்யாவின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Share this story