தாலியுடன் புகைப்படம் வெளியிட்ட சாக்ஷி அகர்வால்.. ரசிகர்கள் அதிர்ச்சி !

தாலியுடன் புகைப்படம் வெளியிட்ட சாக்ஷி அகர்வால்.. ரசிகர்கள் அதிர்ச்சி !

தாலியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபலமான இவர், காலா, விஸ்வாசம், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘புரவி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரீலிசுக்கு தயாராக உள்ளது.

தாலியுடன் புகைப்படம் வெளியிட்ட சாக்ஷி அகர்வால்.. ரசிகர்கள் அதிர்ச்சி !

இதையடுத்து ‘தி நைட்’ என்ற படத்தில் சாக்ஷி அகர்வால் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது‌. இதையடுத்து இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறு நடைபெற்று வருகிறது. அனிமல் த்ரில்லராக படமாக உருவாகி வரும் இப்படத்தின் கதாநாயகனாக இசையமைப்பாளர் விது நடித்து வருகிறார்.

தாலியுடன் புகைப்படம் வெளியிட்ட சாக்ஷி அகர்வால்.. ரசிகர்கள் அதிர்ச்சி !

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அகர்வால், தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தாலியுடன் இருக்கும் புகைப்படம் சிலவற்றை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இந்த புகைப்படங்கள் ஏதோ படத்தில் நடிக்கும்போது எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.

Share this story