என்னைப்போல் நீங்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் – பிரபல நடிகை வேண்டுகோள் !

என்னைப்போல் நீங்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் –  பிரபல நடிகை வேண்டுகோள் !

அனைவரும் மாஸ்க் அணிந்துக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள் என நடிகை வெண்பா கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழில் ‘காதல் கசக்குதய்யா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வெண்பா. அதன்பிறகு ‘பள்ளி பருவத்திலே’, ‘மாயநதி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையே கொரானாவின் 2வது அலையின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. ஆனாலும் 3வது அலை வரும் என்ற அச்சம் மக்களிடையே உள்ளது.

என்னைப்போல் நீங்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் –  பிரபல நடிகை வேண்டுகோள் !

இதனால் பொதுமக்கள் அனைவரும் வரிசையில் நின்று தடுப்பூசி போட்டு வருகின்றனர். அந்த வகையில் அரசியல்வாதிகள், முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்டோரும் தடுப்பூசி போட்டு வருகின்றனர். அதோடு தடுப்பூசி குறித்து பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் சமூக விழிப்புணர்வையும் பிரபலங்கள ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை வெண்பா இன்று தனது முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். இது குறித்து புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ள பதிவில், நான் தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். அனைவரும் தடுப்பூசிப் போட்டுக் கொண்டு பாதுகாப்பாக இருங்கள். தயவு செய்து மாஸ்க் அணியுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this story