முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள இசைப்புயல்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள இசைப்புயல்!

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலினுக்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் கடும் போட்டி நிலவியது. இருப்பினும் திமுக அதிகப்படியான இடங்களைக் கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றுள்ளது. அதையடுத்து பல்வேறு மாநிலங்களின் அரசியல் கட்சித் தலைவர்களும், திரைத்துறை பிரபலங்களும் மக்களும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள இசைப்புயல்!

தற்போது இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். “சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய,  இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.” என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள ஸ்டாலின் “இசைப்புயல் – ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story