அரசியல் களத்தில் அதகளம்… ப்ளூசட்டை மாறன் பட மோஷன் போஸ்டர் வெளியானது!

அரசியல் களத்தில் அதகளம்… ப்ளூசட்டை மாறன் பட மோஷன் போஸ்டர் வெளியானது!

ப்ளூசட்டை மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆன்டி இந்தியன்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூசட்டை மாறன் இயக்கத்தில் ‘ஆன்டி இந்தியன்’ என்ற படம் உருவாகியுள்ளது.

அரசியல் களத்தில் அதகளம்… ப்ளூசட்டை மாறன் பட மோஷன் போஸ்டர் வெளியானது!

இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், இசையும் கூட ப்ளூசட்டை மாறனே கையாண்டுள்ளார். படத்தில் நிறைய சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் இந்தப் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க சென்சார் போர்டு அதிகாரிகள் மறுத்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் அந்த பிரச்சினை தீர்க்கப்பட்டது.

தற்போது ஆன்டி இந்தியன் படத்தின் மோஷன் போஸ்டர் இன்று ரமலான் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது. மோஷன் போஸ்டர் அரசியல் சீர்கேடுகளை பகடி செய்யுமாறு அமைந்துள்ளது.

அரசியல் களத்தில் அதகளம்… ப்ளூசட்டை மாறன் பட மோஷன் போஸ்டர் வெளியானது!

இந்து மதத்தைச் சார்ந்த ஒருவரின் இறுதிச் சடங்கில் இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தோரும் உடன் செல்கின்றனர். போஸ்டரில் ப்ளூசட்டை மாறனின் புகைப்படம் கண்ணீர் அஞ்சலி போஸ்டருடன் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அவரது பெயர் பாட்ஷா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று குரங்குகளும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. நடுவே உள்ள குரங்கின் கழுத்தில் காவி நிறம் அணியப்பட்டுள்ளது. எனவே படத்தில் சர்ச்சைக்குப் பஞ்சமிருக்காது என்று நன்றாகவே தெரிகிறது.

ப்ளூசட்டை மாறனின் படைப்பு ரசிகர்களைக் கவருமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

Share this story