திருமணம் எப்போது ? சீக்ரெட்டை உடைத்த நடிகை டாப்ஸி !

திருமணம் எப்போது ? சீக்ரெட்டை உடைத்த நடிகை டாப்ஸி !

தனது திருமணம் குறித்த சில ரகசியங்களை நடிகை டாப்ஸி உடைத்துள்ளார்.

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் உருவான ‘ஆடுகளம்’ படத்தின் மூலம்‌ அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அதன்பிறகு ஆரம்பம், காஞ்சனா–2, கேம் ஓவர் உள்ளிட்ட சில படங்களில் தமிழில் நடித்துள்ளார். தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட் பக்கம் சென்றார். தற்போது தெலுங்கு மற்றும் இந்தியில் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

திருமணம் எப்போது ? சீக்ரெட்டை உடைத்த நடிகை டாப்ஸி !

இந்தியில் பிங்க், பத்லா, நாம் சபானா, மி‌ஷன் மங்கள் போன்ற படங்களில் நடித்து பிசியாகிவிட்டார். டாப்ஸியின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல அங்கீகாரத்தை ‌பெற்று தந்துள்ளது. இதையடுத்து அனுராக் காஷ்யப்பின் இயக்கத்தில் ‘டூ-பாரா’, ‘லூப் லாபெட்டா’, மற்றும் ‘சபாஷ் மித்து’ உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். விரைவில் இந்த படங்களை வெளியாக உள்ளது

திருமணம் எப்போது ? சீக்ரெட்டை உடைத்த நடிகை டாப்ஸி !

இந்நிலையில் தனது திருமணம் குறித்த சில ரகசியங்களை நடிகை டாப்ஸி உடைத்துள்ளார். இப்போதைக்கு திருமணம் பற்றி சிந்திக்கவே இல்லை. வருடத்திற்கு ஐந்து படங்கள் வரை நடித்து வருகிறேன். அது எப்போது இரண்டாக குறைகிறதோ, அப்போதுதான் திருமணம் குறித்து யோசிப்பேன் என்று தெரிவித்துள்ளார். தனது மார்க்கெட் குறைந்தால் மட்டுமே திருமணம் என்பதை சூசகமாக டாப்ஸி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this story