ஏஆர் ரஹ்மானுக்காக இசையமைத்துள்ள சந்தோஷ் நாராயணன்!

ஏஆர் ரஹ்மானுக்காக இசையமைத்துள்ள சந்தோஷ் நாராயணன்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தெற்காசிய சுயாதீனக் கலைஞர்களின் குரலை உலக அரங்கில் ஒலிக்கச் செய்யும் விதமாக மாஜா என்ற புதிய தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

தற்போது இந்த் தளத்திற்காக முதல் பாடல் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ளது. ‘என்ஜாய் எஞ்சாமி’ ( Enjoy Enjaami ) பாடலை பாடடி தீ பாடியுள்ளார். கவிஞர் அறிவு இப்பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார். நேற்று முன்தினம் இந்தப் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது.

ஏஆர் ரஹ்மானுக்காக இசையமைத்துள்ள சந்தோஷ் நாராயணன்!

அந்த விழாவில் இயக்குனர் பா ரஞ்சித், தயாரிப்பாளர் எஸ் தாணு, சந்தோஷ் நாராயணன், கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் தேவா, இயக்குனர் மாரி செல்வராஜ், நலன் குமாரசாமி, சுதா கொங்கரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஏஆர் ரஹ்மானுக்காக இசையமைத்துள்ள சந்தோஷ் நாராயணன்!

இந்த விழாவில் கலந்துகொண்டு இயக்குநர் சுதா கொங்கரா சந்தோஷ் நாராயணன், அறிவு மற்றும் தீ கூட்டணி யாராலும் மிஞ்ச முடியாத அழகான கூட்டணி என்று பேசியுள்ளார்.

இசைத் திறமைகளை அறிமுகப்படுத்துவதில் சந்தோஷ் நாராயணன் மிகத்தீவிரமாக இயங்குபவர். தீ வெறும் பின்னணிப் பாடகர் அல்ல பாடல் வரிகளின் உணர்வுகளை அற்புதமாக வெளிக்கொண்டு வருபவர். இப்பாடல் அவரது திறமையை வெளிக்கொண்டு வந்துள்ளது. அறிவு மிகச்சிறப்பான பணியினைச் செய்துள்ளார். என்று இயக்குனர் பா ரஞ்சித் பேசியுள்ளார்.

Share this story