“இந்தப் படத்தில் மிகவும் தீவிரமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்”… மனம் திறக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

“இந்தப் படத்தில் மிகவும் தீவிரமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்”… மனம் திறக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

பூமிகா படத்தில் தான் மிகவும் தீவிரமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

ரதிந்திரன் ஆர் பிரசாத் என்பவர் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ‘பூமிகா’ என்ற படத்தில் நடித்துள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். பிருத்வி சந்திரசேகர் என்பவர் இசையமைத்துள்ளார். இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் ராபர்டோ ஸஸ்ஸாரா இப்படத்தில் பணியாற்றியுள்ளார்.

“இந்தப் படத்தில் மிகவும் தீவிரமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்”… மனம் திறக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் கலந்துகொண்ட நேர்காணலில், தான் பூமிகா படத்தில் மிகவும் தீவிரமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இயற்கை எப்படி மனிதர்களை பழிவாங்குகிறது என்ற வகையில் இந்தப் படம் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பூமிகா திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாகவிருக்கிறது. இருப்பினும் தன்னுடைய படங்களை ஓடிடி தளங்களில் அல்லாமல் திரையரங்குகளில் தான் பார்க்க விரும்புகிறேன் என்றும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நானி உடன் டக் ஜெகதீஷ், டிரைவர் ஜமுனா, திட்டம் இரண்டு, தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

Share this story