“நான் கார்த்திக் சுப்புராஜின் ரசிகர் ஆகிவிட்டேன்”… மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ்!

“நான் கார்த்திக் சுப்புராஜின் ரசிகர் ஆகிவிட்டேன்”… மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ்!

தான் கார்த்திக் சுப்புராஜின் பெரிய ரசிகன் என்று மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜோஜு ஜார்ஜ். இவரது நடிப்பிற்கு இந்தியா முழுவதும் அதிக ரசிகர்கள் உள்ளனர். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் திறம்பட கையாள்பவர். அவர் தற்போது ஜகமே தந்திரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். எனவே மலையாளப் படங்களின் தமிழ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

“நான் கார்த்திக் சுப்புராஜின் ரசிகர் ஆகிவிட்டேன்”… மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ்!

தற்போது ஜோஜு ஜார்ஜ் ஜகமே தந்திரம் படம் குறித்து பேசியுள்ளார். “நான் கார்த்திக் சுப்புராஜின் மிகப்பெரிய ரசிகன். இந்தப் படத்தில் நடிப்பதற்காக ஆடிஷனில் கலந்துகொண்ட போது கார்த்திக் என்னை சில காட்சிகளில் நடித்துக் காண்பிக்கச் சொன்னார். தமிழ் முழுமையாகத் தெரியாவிட்டாலும் அரைகுறையாகப் பேசி நடித்தேன். அதை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டார். இந்தப் படத்தில் ஜேம்ஸ் காஸ்மோ உடன் நடித்தது எனது பெருமை.” என்று தெரிவித்துள்ளார்.

“நான் கார்த்திக் சுப்புராஜின் ரசிகர் ஆகிவிட்டேன்”… மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ்!

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18-ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Share this story