விஜயை அடுத்து மோகன்லால் உடன் நடிக்கும் அஜித்!?

விஜயை அடுத்து மோகன்லால் உடன் நடிக்கும் அஜித்!?

மோகன்லால் இயக்கிவரும் படத்தில் நடிகர் அஜித்குமார் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ‘பரோஸ் – கார்டியன் ஆஃப் டி’காமாவின் புதையல்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மோகன்லால் தனது 43 ஆண்டுகால சினிமா பயணத்தில் முதன்முறையாக இயக்குனராகக் களமிறங்க இருப்பதால் இந்தப் படத்திற்கு இந்திய அளவில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

விஜயை அடுத்து மோகன்லால் உடன் நடிக்கும் அஜித்!?

தற்போதைய அப்டேட் என்னவென்றால், இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது. மோகன்லால் அஜித்திடம் கேட்டுக்கொண்டதை அடுத்து அவர் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தாக கூறப்பட்டது. ஆனால் பர்ரோஸ் படக்குழு இந்த செய்தியை மறுத்துள்ளனர்.

விஜயை அடுத்து மோகன்லால் உடன் நடிக்கும் அஜித்!?

இப்படத்தில் நடிகர் ப்ரித்வி ராஜும் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் 3டி டெக்னாலஜியில் பேண்டஸி படமாக உருவாகிறது. ஆஷிர்வாட் சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற உள்ளார். ஏஆர் ரஹ்மானின் மாணவர் லிடியன் நாதஸ்வரம் இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

Share this story